மாற்கு
- Get link
- X
- Other Apps
காலம் நிறைவேறிற்று,தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று,மனந்திரும்பி,சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்.
மாற்கு 1:15
இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.
மாற்கு 1:41
இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு,திமிர்வாதக்காரனை நோக்கி,மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
மாற்கு 2:5
நீ எழுந்து,உன் படுக்கையை எடுத்துக்கொண்டு,உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மாற்கு 2:11
இயேசு அதைக் கேட்டு,பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை, நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
மாற்கு 2:17
தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும்,எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
மாற்கு 3:35
எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும், கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.
மாற்கு 4:24
அவர் எழுந்து, காற்றை அதட்டி,கடலைப்பார்த்து, இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
மாற்கு 4:39
அவர் அவளைப் பார்த்து,மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது,நீ சமாதானத்தோடேபோய்,உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்,
மாற்கு 5:34
பயப்படாதே,விசுவாசமுள்ளவனாயிரு
மாற்கு 5:36
பிள்ளையின் கையைப் பிடித்து, தலீத்தாகூமி என்றார், அதற்கு,சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.
மாற்கு 5:41
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment