லூக்கா

ஸ்திரீயே, உன்பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய்  லூக்கா 13:12  தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.  லூக்கா 14:11  தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.   லூக்கா 14:27  அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.  லூக்கா 14:33 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.   லூக்கா 16:10  எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.   லூக்கா 16:13   உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள், அவன் மனஸ்தாபப்பட்டால்...

லூக்கா

 பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, லூக்கா 1:13 


உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்,

லூக்கா 1:14


 கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். 

 லூக்கா 1:28


பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். 

 லூக்கா 1:30 


தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை 

 லூக்கா 1:37 


இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது 

லூக்கா 1:38


 ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. 

லூக்கா 1:42


விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் . 

 லூக்கா 1:45 


என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. 

லூக்கா 1:46 


என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. 

 லூக்கா 1:47 


அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார், இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். 

 லூக்கா 1:48 


வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார், அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. 

 லூக்கா 1:49 


அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. 

 லூக்கா 1:50 


தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார், இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். 

 லூக்கா 1:51 


பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.

 லூக்கா 1:52 


 பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். 

 லூக்கா 1:53 


இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 

 லூக்கா 1:68


தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

 லூக்கா 2:10


 உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.

 லூக்கா 2:14 


ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர், 

 லூக்கா 2:29 


உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.

 லூக்கா 2:32 


இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.

 லூக்கா 2:52 


கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் 

 லூக்கா 3:3 


பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் 

லூக்கா 3:4 


மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள், 

 லூக்கா 3:8 


பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. 

லூக்கா 3:22


  மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் . 

 லூக்கா 4:4 


 உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக. 

 லூக்கா 4:8 


அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். 

 லூக்கா 4:12


அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார், உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று. 

லூக்கா 5:13 


நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். 

 லூக்கா 5:32  

Comments

Popular posts from this blog

லூக்கா

மாற்கு

மாற்கு